Saturday, August 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/08/large/702624.jpgகோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மாயமாகவில்லை: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை அறிக்கை தாக்கல்

தமிழக கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மாயமாகவில்லை என உயர் நீதிமன்றத்தில் அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழக அரசு கடந்த 1985–87-ம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்தது. ஆனால் கடந்த 2018–19, 2019–20-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளதாகக் கூறியுள்ளது. எனவே மாயமாகியுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கண்டுபிடிக்க அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...