Friday, August 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/28/large/709917.jpgசெப்.1 கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் நெல்லை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மேலும் 7 மாணவிகளுக்கு கரோனா: மாணவியர் விடுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

செப்.1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மேலும் 7 மாணவிகளுக்கு நேற்று கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் இக்கல்லூரியில் பயில்கிறார்கள். கரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு நேரடி வகுப்புகள் தொடங்கின. கல்லூரிவிடுதியில் மாணவிகள் தங்கியுள்ளனர். விடுதியில் 24-ம் தேதி ஒருமாணவிக்கும், நேற்று முன்தினம் 4 மாணவியருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, மாணவ - மாணவியர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நேற்று முன்தினம் தொடங்கியது. 200 மாணவிகளுக்கான பரிசோதனை முடிவு நேற்றுவெளியானது. அதில், விடுதியில் தங்கியிருந்த மேலும் 7மாணவிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டது. அம்மாணவிகள் கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 12 பேருக்குமே எந்த அறிகுறியும்இல்லாமல், கரோனா இருந்துள்ளது ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...