
வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நேற்றுமுன்தினம் இரவு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ராணுவம், ரயில், மின் உற்பத்தி உட்பட அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டால் அரசு எதை நிர்வகிக்கும்? இதைமுழுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். பாஜக கூட்டணியில் இருப்பதால் வேறு வழியில்லாமல் இதை அதிமுக ஆதரிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்