Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/707992.jpgகொள்முதல் விலை சரிவால் கண் கலங்க வைக்கும் சின்ன வெங்காயம்: பதுக்கலை முன்கூட்டியே தடுக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, பொங்கலூர், குண்டடம் வட்டாரங்கள் மற்றும் திருப்பூரை ஒட்டியுள்ள ஈரோடு மாவட்ட பகுதிகளான சென்னிமலை, அரச்சலூர், கொடுமுடி, சிவகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு பயிரிடப்படும் சின்ன வெங்காயம், மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள் மூலமாக விவசாயிகளிடம் நேரடியாகவும், சந்தைகள் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு, திருப்பூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

நடப்பு ஆண்டு மே, ஜூன் மாதங்களில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம், தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. சந்தையில், அளவில் பெரிய சைஸ் கொண்ட சின்ன வெங்காயம் கிலோ ரூ.45 வரையும்,சிறிய சைஸ் கிலோ ரூ.35 மற்றும் ரூ.100-க்கு 3 கிலோ வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...