
இந்து மதம், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18-ம் தேதி கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்பரபரப்பாகி, தமிழகத்தில் மதரீதியிலான அதிர்வலையை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்