
‘G’ அல்லது ‘அ’ எழுத்து மற்றும் ‘Human Rights' என்று எழுதியுள்ள தனியார் வாகனங்களில் சோதனை நடத்தும்படி அனைத்து சோதனைச்சாவடிகளில் உள்ள போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்களில் அரசு வாகனங்கள் போல ‘G’ அல்லது ‘அ’ எழுத்து உள்ளது. சிலர் Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்துசொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர். வாகனச் சோதனையின்போது இவர்கள் போலீஸாருக்கு ஒத்துழைப்பதில்லை. இதுபோன்ற ஸ்டிக்கர்கள் அல்லது போர்டுகள் வைத்து வரும் வாகனங்களை போலீஸாரும் விட்டுவிடுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்