
வேலூர் அருகே மதுபோதையில் சித்தியின் தலையில் குழவிக் கல்லைப் போட்டு கொலை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (47). கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர், வீட்டில் இருந்து நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. அக்கம் பக்கம் வீட்டில் வசிப்பவர்கள் சந்தேகம் அடைந்து வீட்டினுள் சென்று பார்த்தனர். அப்போது, கோவிந்தம்மாள் தலையில் குழவிக்கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்