Sunday, August 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/23/large/708021.jpgதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு உழைத்த மாவட்ட தலைவர்களுக்கு கார் பரிசு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கோவைதெற்கு, நாகர்கோவில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி ஆகிய 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்கள் வெற்றி பெற காரணமாக இருந்த 4 மாவட்ட தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கார் பரிசாக வழங்கப்படும் என்று அப்போதைய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசளிக்கும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் தொகுதி அடங்கிய கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், திருநெல்வேலி தொகுதி அடங்கிய திருநெல்வேலி மாவட்டதலைவர் மகாராஜன், கோவை தெற்கு தொகுதி அடங்கிய கோவை நகர் மாவட்ட தலைவர் நந்தகுமார், மொடக்குறிச்சி தொகுதி அடங்கிய ஈரோடு தெற்கு மாவட்டதலைவர் சிவ சுப்பிரமணியன் ஆகிய 4 பேருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க.தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் இணைந்து காரை பரிசாக வழங்கினார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...