Wednesday, August 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/26/large/709198.jpgரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சக்கரபாணி உறுதி

ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ்குமார் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 5 விதமான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், பல அட்டைதாரர்கள், தாங்கள் முன்னுரிமை அட்டைகளுக்கான பயனாளிகளாக இருந்தபோதும், முன்னுரிமை அற்ற குடும்பங்களுக்கான அட்டை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். தீபாவளி வரை ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். ஆனால், அந்த அரிசி திட்டம் ஜூலை மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் புதிதாக அமைந்த திமுக ஆட்சியை குறை கூறி வருகின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...