
கரோனா பரவலால் இந்த ஆண்டு தேசியக் கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் குறைந் துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் தேசியக் கொடிதயாரிப்புப் பணிகள் தீவிரமடைந் துள்ளன. கோவை ராஜவீதியில் உள்ள தனியார் கதர் விற்பனையகம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தேசியக்கொடி தயாரிப்புப் பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன. கதர், மைக்ரோ, வெல்வெட் ஆகிய துணிகளைக் கொண்டு ‘இன்ச்’ அளவில் குறைந்தபட்சம் 8-க்கு 10 அளவு முதல் அதிக பட்சம் 40-க்கு 72 வரை வெவ்வேறு அளவுகளில் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. ‘அடி’ அளவில் குறைந்தபட்சம் 5-க்கு 12 என்ற அளவுமுதல் அதிகபட்சம் 15-க்கு 30 என்ற அளவு வரையும் தேசியக்கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்