Friday, August 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/14/large/704752.jpgமுதல்வர் கொடி ஏற்றும் கோட்டையை சுற்றி 5 அடுக்கு வளையம்; தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: சென்னையில் சுதந்திர தின கண்காணிப்பு பணியில் 15 ஆயிரம் போலீஸார்

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது மட்டும் அல்லாமல் முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்ளலாம். எனவே, அனைத்து மாநில போலீஸாரும் உஷார் நிலையில் இருக்கும்படி மத்திய உளவுத் துறை மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. இதையடுத்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக 13 கடலோர மாவட்டங்களிலும் கடலோரக் காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...