
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருகிறோம் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்