Sunday, September 26, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/27/large/720386.jpgஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் 3,346 பேர் போட்டியின்றி தேர்வு: களத்தில் 80,819 வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் தொடங்கியது

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதரமாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில்3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது களத்தில் 80,819 வேட்பாளர்கள் உள்ளனர். வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. அத்துடன் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் அக்.9-ல் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...