Friday, September 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/18/large/716986.jpgஅதிமுக, பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தின விழாவில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் நேற்று மாலை பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமை வகித்தார். பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் மாநில செயலாளர்கள் திவாகர், பாஸ்கர், மோட்சம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்று கேக் வெட்டி வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...