Saturday, September 18, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/19/large/717459.jpgபுரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களுக்கு வெளியில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களுக்கு வெளியே நின்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்ஒரு பகுதியாக, வாரந்தோறும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் பிறந்தது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விசேஷமான நாளாக கருதப்பட்டு வருகிறது. எனவே, ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாககாணப்படுவது வழக்கம். பக்தர்கள்தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் நேற்று அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...