Thursday, September 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/03/large/711945.jpgபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மின் ரயில்களில் நேரக் கட்டுப்பாடு இல்லை: சீசன் டிக்கெட்டும் வழங்கப்படும் என அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க நேரக் கட்டுப்பாடு இல்லை. மேலும், தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து சீ்சன் மற்றும் ரிட்டன் டிக்கெட் பெறலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 600-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பணியாளர்கள், பெண்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி ரயில்களில் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆண் பயணிகளுக்கு மட்டும் அலுவலக நேரங்களில் பயணிக்க கட்டுப்பாடு இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மின்சார ரயில்களில் மாணவர்களுக்கான நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...