
ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில், ரூ.7,523 கோடி மதிப்பில் 118 அர்ஜுன் எம்கே-1ஏ பீரங்கி வாகனங்களைத் தயாரித்து வழங்குவதற்கான பணி ஆணையை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
நவீன பீரங்கி வாகனமான எம்கே-1ஏ, அர்ஜுன் பீரங்கி வாகனத்தின் புதிய வகையாகும். எம்கே-1வகை பீரங்கி வாகனத்துடன் ஒப்பிடும்போது 72 புதிய அம்சங்கள் மற்றும் உள்நாட்டு உபகரணங்களும், எம்கே-1ஏ பீரங்கி வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்