
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கில் படிப்படியாகதளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் சில நிபந்தனைகளுடன் (ஞாயிறு தவிர) மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. இதனால், மெரினா கடற்கரை, வண்டலூர் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு மக்கள் செல்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தேவையின் அடிப்படையில் மாநகர போக்குவரத்துகழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்