Saturday, September 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/26/large/720071.jpgகோத்தகிரி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த யானை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து ஈரோடு நோக்கி நேற்றுஅரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் சாலை யில், தட்டப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தை ஒற்றை யானை வழிமறித்தது. இதனால், சிறிது தூரம் ஓட்டுநர், பேருந்தை பின்னால் இயக்கினார்.

இருப்பினும் விரட்டி வந்த யானை, திடீரென தும்பிக்கையால் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது. இதனால், ஓட்டுநர் தனது இருக்கையில் இருந்து எழுந்து பேருந்தினுள் ஓடினார். யானையைக் கண்டு பயணிகள் அலறினர். பயணிகளை ஆசுவாசப்படுத்தி, அமைதியாக இருக்குமாறு நடத்துநர் கூறினார். சில நிமிடங்கள் அமைதியாக நின்ற யானை பின்னர் அங்கிருந்து நகர்ந்து சாலையோரம் சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...