
மானாமதுரை அருகே காங்கிரஸ் கூட் டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும், நிர்வாகிக்கும் இடை யே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மானாமதுரை அருகே வெள்ளிக் குறிச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டிவேலு பேசுகையில், மானாமதுரையில் காங்கிரஸ் வளர வில்லை. இதற்கு தற்போதுள்ள நிர்வா கிகள்தான் காரணம். அவர்களை மாற்ற வேண்டும். கட்சி கூட்டத்துக்கு அழைப் பதில்லை. பூத் கமிட்டியை முறையாக அமைக்கவில்லை என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்