Thursday, September 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/03/large/712011.jpgமுதல்வரின் தனிப்பிரிவு எடுத்த நடவடிக்கையால் மின்னல் வேகத்தில் பொதுப்பாதை தடுப்புச்சுவரை அகற்றிய அதிகாரிகள்

நெய்வேலி அருகே தனியார் மனைப்பிரிவுகளுக்கு செல்லும் ஊராட்சிக்கு சொந்தமான தார் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர் எழுப்பி அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ‘இந்து தமிழ் திசை'யில் நேற்றுமுன்தினம் வெளியான செய்தி எதிரொலியாக, முதல்வரின் தனிப்பிரிவு எடுத்த நடவடிக்கையால் அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தடுப்புச்சுவரை நேற்று அகற்றியுள்ளனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா மருங்கூர் கிராமத்தில் கும்பகோணம் - சென்னை 4 வழிச்சாலை அருகில் டேனக்ஸ் பவர் என்ற தனியார் நிறுவனம் எவர்கிரீன் நகர் என்ற பெயரில் வீட்டுமனைப் பிரிவுகளை விற்பனை செய்து வருகிறது. இந்த மனைப் பிரிவுக்கு செல்லும் ஊராட்சிக்கு சொந்தமான 30 அடி தார்சாலையில் ஒரு கும்பல் கடந்த ஜூலை 21 அன்று தடுப்புச்சுவர் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட 115 வீட்டுமனைதாரர்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஊராட்சி பொதுப்பாதையில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று முன்தினம் (செப்.1) விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...