
போற்றி புத்தகங்கள் முதுநிலை கோயில்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்ட கோயில்களின் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்து சமயஅறநிலையத் துறை ஆணையர்குமரகுருபரன், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, “சென்னை மாவட்டத்தில் அறநிலையத் துறைக்குச் சொந்தமாக 1,206 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் திருப்பணி, தேர், குளம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோயில்களின் பணியாளர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்