Friday, October 22, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/23/large/729500.jpgடிச.1 முதல் தீப்பெட்டி விலை ரூ.2: உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு

`தீப்பெட்டிக்கான விலையை ரூ.1 உயர்த்துவது’ என, உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தீப்பெட்டி விற்பனை விலை 2007-ம் ஆண்டுதொடங்கி மாற்றமில்லாமல் ரூ.1 என்ற நிலையிலேயே விற்பனையாகி வந்தது. தற்போது, மூலப்பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், லாரி வாடகை ஆகியவை உயர்வால், தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரினர்.இதன்படி, அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டிசம்பர் 1-ம் தேதி முதல் 50குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூ.2-க்கு விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...