
தனியார் நிறுவன அலுவலகத்தில் ரூ.72 லட்சம் கொள்ளையடித்து தப்பியபிரபல கொள்ளையனை போலீஸார் சினிமா பாணியில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஆசிஷ் பன்சால். இவர், ஆந்திரா மற்றும் பெரும்புதுாரில் வாகன பேட்டரிகளுக்கு அலுமினிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இதன் தலைமை நிர்வாக அலுவலகம், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றின் 4-வது தளத்தில் உள்ளது. கடந்த 10-ம் தேதி இந்நிறுவனத்தில் அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்து அங்கிருந்த ரூ.72 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்