
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை வடபழனி ஆண்டவர் கோயில், ஆதிமூலப் பெருமாள் கோயில்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆதிமூலப் பெருமாள் கோயில் அருகில் பூஜை பொருட்கள், மலர் மாலைகள் விற்பனைக்கான கடைகளை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆதிமூலப் பெருமாள் கோயிலின் நுழைவு வாயிலில் 15 கடைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்றாலும், சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். எனவே, கோயிலுக்கு சொந்தமாக அருகில் உள்ள மாநகராட்சி பயன்படுத்தி வந்த இடத்தை பெற்று, அங்கு ரூ.8 லட்சத்தில் கடைகள் கட்டப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்