
மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தாங்களே எப்படிசுய பரிசோதனை மேற்கொள்வதுஎன்பது குறித்து வழிக்காட்டுவதற்காக அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை சார்பில் இணைதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. மருத்துவமனைகள் குழும துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, நடிகைகுஷ்பு ஆகியோர் https://ift.tt/3uXc7lB சேவையை தொடங்கி வைத்தனர். மருத்துவர்கள் டி.ராஜா, ரத்னா தேவி, பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்