
கோவில்பட்டி தங்கப்ப நகரைச்சேர்ந்த லாரி ஒட்டுநர் இளங்கோவன் மனைவி கற்பகம் (34), அவரது மகள் தர்ஷினி (7) ஆகிய இருவரும், அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12-ம் தேதி பரோட்டா மற்றும் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டனர். பின்னர், குளிர்பானம் வாங்கிக் குடித்தனர். பின்பு,இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கிக் கிடந்தனர்.
இதைக்கண்ட கற்பகத்தின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரும் உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்