Thursday, October 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/28/large/731438.jpgசங்கராபுரம் பட்டாசுக் கடை உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசுக் கடையில் கடந்த 26-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக கடையின் உரிமையாளர் செல்வகணபதி மீது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக வெடிபொருட்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் மளிகைக் கடையில் மேல் தளத்தில் பட்டாசு விற்பனை நடத்தி வந்தார். இந்தக் கடையில் நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள பேக்கரி கடைக்கும் பரவியதைத் தொடர்ந்து, பேக்கரி கடையில் இருந்த 8 எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின. இதில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது மட்டுமின்றி, பக்கத்துக் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...