Sunday, October 31, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/01/large/732955.jpgஅணைகள் நிரம்பியும் தண்ணீர் தட்டுப்பாடு: உதகை நகராட்சி மீது மக்கள் குற்றச்சாட்டு

நீலகிரி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு மேல் மழை பெய்ததால், உதகை நகராட்சிக்குட்பட்ட அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. முறையாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து 6 மாதங்களாக மழை பெய்ததால், உதகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பார்சன்ஸ் வேலி, டைகர்ஹில்ஸ், கோரி சோலா, கிளன்ராக், ஓல்டுஊட்டி, தொட்டபெட்டா அப்பர் மற்றும் லோயர், கோடப்பமந்து அப்பர் மற்றும் லோயர், மார்லிமந்து அணை என அனைத்துஅணைகளும் நிரம்பியுள்ளன. ஆனால், உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தண்ணீர் விநியோகம் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...