Tuesday, October 12, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/13/large/725985.jpgரூ.500 கிடைக்காததால் வாக்களிக்க விருப்பமில்லை: வாக்குச்சீட்டில் எழுதிவைத்த வாக்காளர்

‘ரூ.500 கிடைக்காததால் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று, வாக்குச்சீட்டில் வாக்காளர் எழுதிய வாசகங்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும், முகவர்களுக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கான உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ரோஸ்மேரி கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழநத்தம், திருமலைக்கொழுந்துபுரம், கீழப்பாட்டம், பாளையஞ்செட்டிகுளம், நடுவக்குறிச்சி ஊராட்சிகளுக்கான வாக்குகள் எண்ணும் பகுதியில், ஊராட்சித் தலைவர் பதவிக்கான வாக்குச்சீட்டில் ஒரு வாக்காளர், ‘‘எனக்கு ரூ.500 கிடைக்கவில்லை, எனவே, யாருக்கும் ஓட்டுப்போட விரும்பவில்லை’’ என்று எழுதியிருந்தார். இது அங்கிருந்த வாக்கு எண்ணும் அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு நகைப்பை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...