
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் படகு மீது நடுக்கடலில் ரோந்துப் படகை மோதி இலங்கை கடற்படையினர் மூழ்கடித்த நிலையில், கடலில் தத்தளித்த 2 பேரைஇலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் ஒரு மீனவரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை என்று அவர்கள் கூறினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதில், எஸ்.சவுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ் மகன் ராஜ்கிரண்(30), சுதாகர் மகன் சுகந்தன்(30), அருளானந்தன் மகன் சேவியர்(32) ஆகிய 3 பேரும் கடலில் சுமார் 17 கடல் மைல் தொலைவில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்