
தமிழகம் முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தமிழகஎல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் மற்றும் தீவிரவாதிகள் நடமாட்டம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்துஇதில் ஆலோசிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்