
சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சீர் என்ற தொண்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘`மாநில மனநல கொள்கையை அமல்படுத்த வேண்டும். அதுபோல சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்க உத்தரவிட வேண்டும்'' என கோரியிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்