
சர்வதேச கடல் எல்லைகளைத் தாண்டும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அபராதம் விதிக்கும் பணியில் மீன்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், விசைப்படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன்பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கச்சத்தீவு அருகே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சர்வதேச கடல் எல்லைவரையறுக்கப்பட்டுள்ளது. இதைத் தாண்டி செல்லும் படகுகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் மீன்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்