Sunday, October 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/18/large/727505.jpgகிருமாம்பாக்கம் பகுதியில் தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்களால் நோய் பரவும் அபாயம்: இளைஞர்களே முன்வந்து சுத்தம் செய்தனர்

கிருமாம்பாக்கம் பகுதியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பல நாட்களாக தூர்வாரப் படாமல் கிடந்த கழிவுநீர் வாய்க்கால்களை அப்பகுதி இளைர்களே சுத்தம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப் பட்டது. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக அமைக்கப்படாததாலும், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும் வாய்க்காலில் மண் தூர்ந்து அடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அடைத்துக்கொண்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி துர்நாற்றம் வீசியது. சில இடங்களில் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...