Saturday, November 27, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/28/large/741630.jpgகேரளாவில் கைதான மாவோயிஸ்ட் சிம்கார்டு வாங்கிய விவகாரம்: கோவையில் உள்ள செல்போன் கடையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

கேரளாவில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட், சிம்கார்டு வாங்கிய விவகாரம் தொடர்பாக, கோவையில் உள்ள செல்போன் கடையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை புலியகுளம் ஏரிமேட்டைச் சேர்ந்தவர் தினேஷ் (36). பல் மருத்துவர். இவர், இடையர்பாளையத்தில் சிறிய மருத்துவமனை நடத்தி வந்தார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆதரவாளரான இவரை, கேரள போலீஸார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக, தினேஷிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, தினேஷூக்கு தெரிந்த நபரான, சுங்கம் காமராஜர் வீதியைச் சேர்ந்த டேனிஷ்(32) என்பவரும், மாவோயிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கேரளாவில் பதுங்கியிருந்த டேனிஷையும் சில மாதங்களுக்கு முன்னர் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்களது வீட்டில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...