Wednesday, November 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/25/large/740676.jpgபண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.79-க்கு விற்பனை: வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்ற மக்கள்

சென்னையில் சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.160-க்கு தக்காளி விற்கப்படும் நிலையில், டியூசிஎஸ் பண்ணை பசுமை கடைகளில் நேற்று கிலோ ரூ.79-க்கு விற்கப்பட்டது. பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வழக்கமாக வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்ய வேண்டிய மழையைவிட அதிகமான மழை பெய்துள் ளது. இதன் காரணமாக இந்த 3 மாநிலங்களிலும் தக்காளி உற்பத்தி குறைந்து, அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் கிலோ ரூ.110-க்கு விற்கப்படுகிறது. திருவல்லிக்கேணி ஜாம்பஜார் போன்ற சில்லறை விற்பனை சந்தைகளில் நேற்று கிலோ ரூ.160 வரை விற்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...