Thursday, November 25, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/26/large/741039.jpgரூ.82 கோடி வருமான வரி செலுத்துமாறு ஓபிஎஸ்-க்கு அனுப்பிய நோட்டீஸுக்கு தடை விதிக்க மறுப்பு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸூக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருமான வரித் துறை சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் கடந்த 2015-16 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.20லட்சமும், 2017-18 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.82.12 கோடியும் வரியாகசெலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...