Sunday, November 21, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/22/large/739732.jpgகடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு; திமுக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு திமுக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாத்தனூர் அணையின் உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் கலந்து, இரு மாவட்டங்களின் பல்வேறுபகுதிகள் தீவுபோல காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, திமுக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம் என்றுபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...