Tuesday, November 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/03/large/733688.jpgஅதிமுக பொதுச் செயலர் பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து

தீபாவளித் திருநாளில் சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மைவிட்டு விலக, நன்மையும் அன்பும் நாடிவர, இன்பமாய் தீபாவளியைக் கொண்டாடுவோம் என்று, அதிமுக பொதுச் செயலர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலர் என்ற பெயரில் சசிகலா நேற்று வெளியிட்ட தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாப்படுகிற இந்த நன்னாளில், அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பெரும் தொற்றான கரோனா எனும் கொடிய நோயை வென்று, மனிதகுலம் மீண்டும் புத்துயிர் பெற்று கொண்டாடும் வகையில் இந்த தீபாவளி திருநாளில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், தடுப்பூசியையும் தவறாமல் போட்டுக்கொண்டு கவனமாகவும், சந்தோஷத்துடனும் இந்த தீப ஒளி திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மைவிட்டு விலக, நன்மையும் அன்பும் நாடிவர இன்பமாய் தீபாவளியைக் கொண்டாடுவோம். இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...