
இணையதள சர்வர் கோளாறு காரணமாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல்,கடந்த ஒரு வாரமாக சந்தாதாரர்கள் அவதிப்பட்டு வருவதால், இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் (இபிஎஃப்ஓ) உறுப்பினர்களாக உள்ள சந்தாதாரர்கள், தங்களது மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகின்றனர். அதே அளவு தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவனம் சார்பிலும் செலுத்தப்படும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்டதொகையை திருமணம், வீடுகட்டுதல், மருத்துவச் செலவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு சந்தாதாரர்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்