Tuesday, November 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/10/large/735756.jpgபல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள வேகவதி ஆறு வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கும் பணி: ரூ.200 கோடியில் குடியிருப்புகள் கட்டப்பட்டும் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்காக ரூ.200 கோடி செலவில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையிலும் மக்களை மறு குடியமர்த்தி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டில் பெய்த கனமழையில் காஞ்சிபுரம் நகரில் ஓடும் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறு பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்ததால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...