
சென்னை: திடக்கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வுகளை வழங்குவோருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் தினமும் சுமார் 5 ஆயிரத்து 100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளை வீடு வீடாக வரும் தூய்மைப் பணியாளரிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து மட்டுமே வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைகளை சாலையில் வீசி எறிவோர், தீயிட்டு கொளுத்துவோர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்