Wednesday, December 1, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/02/large/742855.jpgவளர்ச்சித் திட்டங்கள், ஆக்கிரமிப்புகளால் சென்னையில் வெள்ளநீர் தேங்கும் பகுதிகள் அதிகரிப்பு: நிரந்தர வெளியேற்றும் கட்டமைப்பை ஏற்படுத்த வல்லுநர் கோரிக்கை

வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் சென்னையில் வெள்ளநீர் சூழும் பகுதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வுகாண நிரந்தர வெள்ளநீர் வெளியேற்றும் கட்டமைப்பை அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்பது வல்லுநர்களின் கோரிக்கையாக உள்ளது.

சென்னையில் அண்மைக் காலமாக மழை பெய்யும் நாட்கள் குறைந்து, அதிகனமழை பெய்வது அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மாநகரப் பகுதியில் ஆண்டுதோறும் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் சென்னை மாநகரின் பெரும்பாலான ஏரிகள் அழிக்கப்பட்டுவிட்டன. வியாசர்பாடி ஏரி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பாகவும், கொடுங்கையூர் ஏரி முத்தமிழ்நகர் வீட்டு வசதி திட்ட பகுதியாகவும் மாறிவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...