
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்துக்கான தேசிய விருது பெற்ற 6 பேர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கடந்த டிச.3-ம் தேதி டெல்லியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் சார்பில், மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்துக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்