Thursday, December 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/03/large/743088.jpgபல ஆயிரம் கன அடி தண்ணீரை உள்வாங்கினாலும் திசையன்விளை அருகே நிரம்பாத அதிசய கிணறு: சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு

திசையன்விளை அருகே பல ஆயிரம் கனஅடி தண்ணீரை உள்வாங்கினாலும் நிரம்பாத அதிசய கிணற்றில், சென்னை ஐஐடி குழுவினர் நேற்று ஆய்வைத் தொடங்கினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், திசையன்விளை தாலுகா கோட்டைக்கருங்குளம் நம்பியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளன. திசையன்விளை அருகிலுள்ள ஆயன்குளம் ஆற்றுப்படுகை நிரம்பி, அதிலிருந்து உபரிநீர் வெளியேறியது. இந்த நீர், ஆயன்குளத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் சென்றது. விநாடிக்கு 50 கனஅடி வீதம் தொடர்ச்சியாக பல நாட்கள் இந்த கிணற்றுக்குள் தண்ணீர் விழுந்தபோதும், தற்போது வரை அக்கிணறு நிரம்பவில்லை. இது, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. கிணற்றுக்குள் செல்லும் தண்ணீர் எங்கே செல்கிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...