
சென்னையில் செய்தியாளர்களிடம் பாஜகமூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியதாவது: கோயிலில் உள்ள தங்கத்தை அறங்காவலர் இல்லாமல் உருக்க முடியாது. அறங்காவலர் இல்லாமல் தன்னிச்சையாக எந்தசெயலையும் செய்யக் கூடாது. இதில் எந்த அரசியல் தலையீடும் இருக்கக் கூடாது. அரசியல் பின்னணியில் இருப்பவர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்று நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறங்காவலர் நியமனம் தொடர்பாக அறநிலையத் துறை வெளியிட்ட அறிக்கையில் உண்மை இல்லை.
இந்து சமய அறநிலையத் துறையில்இருப்பவர்கள் பக்தியோடு இருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு அதற்கு மாறாகசெயல்படுகிறது. இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஜெயங்கொண்டத்தில் இருக்கும் கோயிலை இடித்தது உட்பட பல்வேறு கோயில்களின் நிதியைசூறையாடும் நோக்கில் அறநிலையத் துறை அமைச்சர், அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்