Friday, January 7, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/08/large/755349.jpgஅலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்: காளைகளுக்கான உடல்தகுதி பரிசோதனை தொடங்கியது

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான உடற்தகுதி பரிசோதனை அலங்காநல்லூர் பகுதியில் தொடங்கியுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் காளைகள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்பதால் உரிமையாளர்கள் காளைகளை பரிசோதனைக்கு அழைத்து வருவதில் ஆர்வம் காட்டினர்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 14, 15, 16 ஆகிய தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு உடல் தகுதி திறன் பரிசோதனை அவசியம். இதற்கான பரிசோதனை அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஏற்கெனவே நடந்து வருகிறது. அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கால்நடை மருத்துவமனையில் உடல்தகுதி பரிசோதனை நேற்று தொடங்கியது. கால்நடை உதவி மருத்துவர் நவநீதகண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...