Tuesday, February 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/23/large/770297.jpgஜோலார்பேட்டை நகராட்சி 10-வது வார்டில் ஒரு வாக்கு கூட வாங்காத பாஜக வேட்பாளர்

திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவரான ஜோலார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த அசோகன் என்பவர் ஜோலார்பேட்டை நகராட்சி 10-வது வார்டில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஜோலார்பேட்டை நகராட்சியில் போட்டியிட்ட பாஜக மாவட்ட தலைவர் அசோகன் ஒரு வாக்கு கூட வாங்காமல் படுதோல்வியடைந்துள்ளார். அந்த வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சிவக்குமார் 845 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...