Thursday, February 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/25/large/771213.jpgமதுரையில் போக்குவரத்து மாற்றத்தால் திக்குமுக்காடும் வாகனங்கள்: பறக்கும் பாலப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

மதுரை-நத்தம் சாலையில் பறக்கும் பாலம் அமைக்கும் பணிக்காக அவுட்போஸ்ட் பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள் ளதால் அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிப். 20 முதல் அமலுக்கு வந் துள்ள போக்குவரத்து மாற்றத்தால் நத்தம் சாலை, தல்லாகுளம் பெரு மாள் கோயில் பகுதி, அவுட் போஸ்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இத னால் வாகன ஓட்டுநர்கள் திக்கு முக்காடுகின்றனர். வெளியூர்களில் இருந்து வருவோர் அழகர்கோவில் சாலை, நத்தம் சாலைக்கு செல்ல பெரிதும் சிரமப்படுகின் றனர். ஓரிரு வாரத்தில் இது சரியா கிவிடும் என போக்குவரத்து போலீ ஸார் தெரிவித்தாலும், தாமதமாக நடக்கும் பாலக் கட்டுமானப் பணியால் வாகன நெருக்கடி தொடருகிறது. கட்டுமான பணியை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...